இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)
1.
பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் நான் – இயேசு
2.
இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் நான் – இயேசு
3.
காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் நான் – இயேசு
4.
கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடும் கொடிய – இயேசு
5.
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது எனக்கு – இயேசு
6.
எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் நான் – இயேசு